Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் குத்து ரம்யா தாயார் எடுத்த அதிரடி முடிவால் காங்கிரஸ் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (06:47 IST)
சிம்பு நடித்த குத்து, தனுஷ் நடித்த பொல்லாதவன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா. இவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள தலைவராக உள்ளார்.

விரைவில் கர்நாடகாவில் தேர்தல் வரவுள்ளதை அடுத்து நடிகை ரம்யாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரம்யாவின் தாயார் ரஞ்சிதா, தான் சுயேட்சையாக போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இதனால்காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதுகுறித்து ரஞ்சிதா கூறியபோது, ' "நான் காங்கிரஸ் சார்பில் போட்டியிட சீட் கோரவில்லை. சுயேட்சையாகப் போட்டியிட திட்டமிட்டுள்ளேன். இதன் காரணமாக நான் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்படுகிறேன் என்று அர்த்தமில்லை. நான் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் எளிமையான தொண்டராகவே இருந்திருக்கிறேன். ஆனால், இன்று கட்சியில் எனது பங்களிப்பு யாராலும் அங்கீகரிக்கப்படவில்லை. அடுத்த வாரம் இது குறித்து முடிவெடுக்கவிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ரம்யா காங்கிரஸ் கட்சி வேட்பாளராகவும், அவரது தாயார் சுயேட்சையாகவும் போட்டியிடும் சூழல் இருப்பதால் கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments