Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துடைப்பம் பிடிக்க தெரியாத ஹேமமாலினி – கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்

Webdunia
சனி, 13 ஜூலை 2019 (16:15 IST)
தூய்மை இந்தியா திட்டத்தை பிரபலப்படுத்துகிறேன் பேர்வழி என்று தெரு கூட்டுவது போஸ் கொடுக்க வந்துவிட்டு துடைப்பம் பிடிக்க தெரியாமல் நின்ற ஹேமமாலினியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவிட்டனர்.

இந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஹேமமாலினி. பாஜக கட்சியில் இணைந்த இவர் தற்போது மதுரா தொகுதியின் எம்.பியாக உள்ளார். வரும் 150வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரது பெயரால் கொண்டுவரப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு 150கி.மீ பாத யாத்திரை செல்ல வேண்டும் எனவும் பாஜக உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூரும், மதுரா எம்.பி ஹேமமாலினியும் தூய்மை இந்தியா திட்டத்தை நாடுதோறும் செயல்படுத்த வேண்டும் என்று கூறி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். அனுராக் தாகூர் குப்பைகளை பெருக்கி கொண்டிருக்க, ஹேமமாலினியோ துடைப்பம் தரையில் கூட படாமல் போட்டோவுக்கு மட்டும் போஸ் கொடுத்து கொண்டிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியது.
அதை ஷேர் செய்த நெட்டிசன்கள் ஹேமமாலினியை சகட்டுமேனிக்கு திட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments