Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபுதாபி வரை பறக்கும் அம்பானியின் வெற்றிக்கொடி: ஜியோ மீது அடுத்த முதலீடு!

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (10:24 IST)
அபுதாபி நிறுவனமான முபாதலா,  ஜியோவின் பங்குகளை வாங்க முன்வந்திருக்கிறது. 
 
ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஜியோ இந்தியா முழுவதும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாகும்.  
 
இந்த நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை அதாவது, ஜியோவின் 9.99% பங்குகளை 5.7 பில்லியன் டாலர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதாவது இந்திய மதிப்பின்படி 43,574 கோடி ரூபாய்க்கு இந்த பங்குகள் வாங்கப்பட்டன.   
 
இதனைத்தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக் எனும் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது. ஆம் இந்நிறுவனம் ஒரு சதவிகித பங்குகளை ரூ 5,655.75 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.  
 
இதனைத்தொடர்ந்து தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது 2.3% பங்குகளை அமெரிக்க தொழில்நுப நிறுவனமாக விஸ்டாவுக்கு விற்பனை செய்துள்ளது. இதன் மதிப்பு ₹11,367 கோடி. இதன் மூலம், ஜியோ நிறுவனம், ₹60596.37 கோடி முதலீடுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில், தற்போது அபுதாபியின் பிரபல நிறுவனமான முபாதலா , ஜியோவின் 1.85% பங்குகளை ரூ.9003 கோடிக்கு வாங்கிகிறது. இதன் மூலம் ஜியோவின் 18.97 சதவிகித பங்குகளை ஆறு பெரிய நிறுவனங்கள் வாங்கியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. 35 நாட்களில் 5 கொலை செய்த மாற்றுத்திறனாளி..!

17 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. எப்போது?

கனமழை எச்சரிக்கை: தமிழக அரசு வெளியிட்ட அவசர கால உதவி எண்கள்..!

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: தேதியை அறிவித்த எடப்பாடி பழனிசாமி..!

அதானி, மணிப்பூர் விவகாரங்களை எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள்: மக்களவை ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments