Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் விமானம் மூலம் தாக்குதல்– எல்லையில் பதட்டமான சூழல் !

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (12:47 IST)
இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவ விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியதை அடுத்து இரு நாட்டு எல்லையில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய விமானப்படை நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தியது. பாலகோட் எனும் பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது 1,000 கிலோ அளவிலான குண்டுகளை மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் வீசியது. இந்தத் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் வரைக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தீவிரவாதிகளின் முகாம்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டதாகவும் இந்திய விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலுக்குப் பாகிஸ்தான் தக்கப் பதிலடிக் கொடுக்கும் அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்தது.

அதையடுத்து சற்று நேரத்திற்கு முன்னர் இந்திய எல்லையில் பாகிஸ்தான் விமானங்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளன. அதனை இந்திய விமானப்படை தடுத்து சுட்டு வீழ்த்தியுள்ளனர். அதனால் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்தத் தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்திய எல்லைப் பகுதிகளில் பயணிகள் விமானம் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பதட்டமானப் பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருநாட்டு விமானங்களும் அடுத்தடுத்த நாட்களில் இப்படித் தாக்குதலில் ஈடுபடுவதால் இரு நாட்டுக்கும் இடையில் போர் மூளும் சூழல் உருவாகியுள்ளதாக மக்கள் அச்சம் அடைந்துள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments