Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபிநந்தன் எங்கு எப்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார்? வெளியான விவரங்கள்

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2019 (18:17 IST)
பாகிஸ்தானிடம் போர் கைதியாக சிக்கியுள்ள அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ள நிலையில் அவர் எங்கு எப்படி ஒப்படைக்கப்படுகிறார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது. 
 
நேற்று பாகிஸ்தான் விமானங்கள் எல்லை தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது. அதில் ஒரு விமானம் தவிர மற்ற இரண்டு விமானங்களும் தப்பி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. 
 
இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். பாகிஸ்தானிடம் இருந்து அபிநந்தனை மீட்க இந்திய அரசு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. 
இதனையடுத்து விமானி அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டு, அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்ற செய்தியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டார். 
 
இந்நிலையில் அபிநந்தன் எப்படி எங்கு ஒப்படைக்கப்படுகிறார் என்ற தகவ்ல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் அரசு அபிநந்தனை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்படுகிறார்.
 
இந்தியா பாகிஸ்தானின் நாடுகளின் எல்லையான வாகாவில் வைத்து நாளை இந்திய விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் அதிகாரிகளால், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments