Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லியில் உள்ள முக்கிய சாலைக்கு அப்துல் கலாம் பெயர்: மோடிக்கு பாஜக எம்பி கோரிக்கை

டெல்லியில் உள்ள முக்கிய சாலைக்கு அப்துல் கலாம் பெயர்: மோடிக்கு பாஜக எம்பி கோரிக்கை
, ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2015 (00:21 IST)
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள முக்கியச் சாலைக்கு, அப்துல் கலாம் பெயரை வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக எம்பி கோரிக்கை 
விடுத்துள்ளார்.
 

 
டெல்லியில் உள்ள ஒளரங்கசீப் சாலைக்கு, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பெயரைச் சூட்டவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாஜக கிழக்கு டெல்லி மக்களவை தொகுதி உறுப்பினர் மகேஷ்கிரி கடிதம் எழுதியுள்ளார்.
 
இது தொடர்பாக மகேஷ் கிரி எழுதியுள்ள கடிதத்தில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறந்த விஞ்ஞானியாகவும், சமூகச் சீர்திருத்த வாதியாகவும் விளங்கினார். இதனால், நாட்டில் உள்ள இளைஞர்களை எல்லாம் அவர் மிகவும் கவர்ந்துள்ளார்.
 
மேலும், தனது வாழ்க்கை முழுவதையும் தாய் நாட்டுக்கே அர்ப்பணித்துள்ளார். எனவே, அவரது தியாகத்திற்கு மரியாதை செய்யும் விதமாக டெல்லியில் உள்ள ஒரங்கசீப் சாலைக்கு, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சாலை எனப் பெயர் மாற்ற வேண்டும் என கூறியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil