டெல்லியிலும் இந்தியா கூட்டணி இல்லை.. 6 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டி..!

Siva
செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (15:12 IST)
இந்தியா கூட்டணி ஏற்கனவே ஒரு சில மாநிலங்களில் சிதறிவிட்ட நிலையில் தற்போது டெல்லியிலும் இந்தியா கூட்டணி இல்லை என்றும் டெல்லியில் உள்ள ஆறு தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே மேற்குவங்கம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி உடன்பாடு கிடையாது என்றும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆறு தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் 6 தொகுதிகளையும் போட்டியிடுவது மற்றும் வேட்பாளர்கள் தேர்வு செய்வது குறித்த பணியில் தற்போது இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தினால் அந்த கட்சிக்கு ஒரு தொகுதி மட்டும் கொடுப்போம் என்றும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ஆறு தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் ஆம் ஆத்மி எம்பி ஒருவர் தெரிவித்துள்ளார். எனவே இந்தியா கூட்டணி சுக்கு நூறாக சிதைந்து விட்டதாகவே கூறப்படுகிறது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments