Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான் - ஆதார் இணைக்க ஜூன் 30-தே கடைசி... ஜூலை முதல் அபராதம்!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (09:06 IST)
எதிர்வரும் 2021 ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதாரிடன் பான் கார்டை இணைப்பது அவசிமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இந்தியாவில் தொழில் தொடங்க மற்றும் பல்வேறு பண பரிவர்த்தனைக்கும் பான் கார்டு எண் அவசியமான ஒன்றாகும். பான் கார்டுக்கு விண்ணப்பித்து 20 நாட்களுக்கு பிறகே பான் எண் கிடைக்கும் என்பதால் பலர் பண பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிரமங்கள் இருந்தன. இந்நிலையில் ஆதார் கார்டு அடிப்படையில் உடனடி பான் எண் வழங்கும் வழிமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 
 
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு 2019 மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது.  பிறகு பல்வேறு காரணங்களால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.  
 
இந்நிலையில் எதிர்வரும் 2021 ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதாரிடன் பான் கார்டை இணைப்பது அவசிமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை செய்ய தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் ஜூலை 1 ஆம் தேதிக்கு பிறகும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments