Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்த வெள்ளத்தில் சரிந்த சல்மான்... டிக் டாக் வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (15:44 IST)
டெல்லியில் டிக் டாக்கால் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை முழுமையாக தற்போது டிக் டாக் வீடியோக்கள் ஆக்கரமிக்க ஆரம்பித்துள்ளன. அவற்றில் திறமையை வெளிக்காட்டும் வீடியோ என்பது மிகவும் குறைவானதே. 
 
பெரும்பாலும் ஒன்றுக்கும் உதவாத ஆபாச வீடியோக்களே. சில அடாவடிகள் அரைகுறையாக அடை அணிந்து டிக்டாக்கில் அட்டூழியம் செய்து வருகின்றனர். ஒரு சில பேர் படத்தில் வரும் தற்கொலை காட்சிகளை போன்று செய்து காட்டும்போது உயிரையும் விடுகின்றனர். இதனால் நீதிமன்றம் டிக் டாக்கிற்கு தடையும் விதித்துள்ளது.
ஆனாலும் டெல்லியை சேர்ந்த சல்மான்(19) என்ற வாலிபர்  தனது நண்பர்களுடன் சேர்ந்து படத்தில் வரும் துப்பாக்கி சுடுதல் காட்சியை போலவே காட்சியை நடித்து அதனை வீடியோவாக எடுத்து டிக் டாக்கில் பதிவேற்றம் செய்ய முடிவு செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சல்மான் கன்னத்தில் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சல்மான் சம்பவ இடத்திலேயே பலியானார். டிக் டாக்கால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments