Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படியில் பயணம் நொடியில் மரணம் என்பதை மெய்ப்பித்த வீடியோ..

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (17:30 IST)
ரயில் பயணம் எல்லோருக்கும் பிடித்தமானது. நீண்ட தூரம் செல்வதற்கும், புதிய இடங்களுக்குச் செல்வதற்கும், ரயில் பயணங்கள் ஏற்றதாக உள்ளது. இதிலுள்ள, கழிவறை, படுக்கை வசதி போன்றவற்றால் பலரும் இப்பயணத்தை தேர்வு செய்கின்றனர்.

ஆனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரயிலில் பயணம் செய்யும்போது, பேருந்து போல இதிலும் படிகளில் பயணம் செய்வது வழக்கமாக உள்ளது.

 படிகளில் தொங்கி கொண்டு பயணம் செய்வதை விளையாட்டாக செய்து வருகின்றனர். இதனால் விபத்துகள் அதிகளவில் நடைபெறுகிறது. அதில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

மின்சார ரயில்களிலும் லோக்கல் டிரெயின்களிலும் படியில்  தொங்கி கொண்டு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இதை தடுக்க ரயில்வேதுறை  பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், இன்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு இளைஞர் படியில் தொங்கிக் கொண்டு செல்லும்போது, எதிர்பாரா விதமாக மின்கம்பம் ஒன்றின் மீது மோதி இளைஞர் துடிதுடித்து கீழே விழுந்தார்.

இந்த சம்பவம் எப்போது நடந்தது  வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இதுபோன்ற ஆபத்தான பயணங்களை தவிர்க்க வேண்டுமென பலரும் கூறி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments