Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோவிலை மிஞ்சும் வகையில் சீதா கோவில்: பீகார் முதல்வர் வேட்பாளர் பேட்டி

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (17:59 IST)
பிகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் 28ஆம் தேதி முதல் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு இறுதிகட்ட தேர்தல் பிரச்சார பணிகள் நடைபெற்று வருகிறது 
இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது போன்றே பீகாரில் சீதாவுக்கு கோயில் எழுப்ப வேண்டும் என்று என் பீகார் மாநிலத்தின் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
பீகார் தேர்தலில் லோக் ஜன சக்தி கட்சி இம்முறை தனித்து போட்டியிடுகிறது என்பதும், இந்த கட்சியின் முதல்வர் வேட்பாளரான சிராக் பாஸ்வான் நேற்று பீகாரில் உள்ள சீதா கோவிலுக்கு சென்று பூஜை நடத்தினார் 
 
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது போன்று, சீதா பிறந்த இடமாக கருதப்படும் பீகாரில் சீதாவுக்கு பிரமாண்டமான கோயில் ஒன்றை எழுப்ப வேண்டும் என்று சிராக் பாஸ்வான் கூறியுள்ளார் 
 
சீதா இல்லாமல் ராமர் இல்லை என்றும் அதனால் ராமர் சீதையை பிரித்துப் பார்க்கத் தேவையில்லை என்றும் அவர் கூறினார். சமீபத்தில் சிராக் பாஸ்வான் தந்தையும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments