Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.பி யில் பயங்கரம்: மாணவனை அடித்தே கொன்ற ஆசிரியர்

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (07:42 IST)
உத்திரபிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியதில், மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கக்கூடாது என்ற சட்டம் இருக்கிறது. அப்படி இருந்தும்கூட சில ஆசிரியர்கள் மாணவர்களை தாக்குகின்றனர்.
 
உத்திரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த 8ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை, பள்ளி ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதில் மாணவன் படுகாயமடைந்தான்.
 
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவத்தை கேட்ட மாணவனின் பெற்றோர் பேரதிர்ச்சிக்கு ஆளாகினர். இதுகுறித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீஸார் மாணவனை கொன்ற ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்திய விசிகவினர்.. அண்ணாமலை கண்டனம்..!

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்: 11 புறநகர் ரயில்கள் ரத்து

ரூ.30,000 கோடி கூகுளுக்கு அபராதம்.. ரத்து செய்யாவிட்டால் நடவடிக்கை என டிரம்ப் எச்சரிக்கை..!

8 மாதங்களுக்கு காணாமல் போன இளம் பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு! காதலனே கொலை செய்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments