விமானத்தில் நடுவானில் பெண் பயணியை கொட்டிய தேள்!

Webdunia
சனி, 6 மே 2023 (14:55 IST)
மும்பை சென்ற இந்திய விமானத்தில், பெண் பயணி ஒருவரை தேள் கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது. .ஏ.ஐ. 630 என்ற எண் கொண்ட அந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் தன் இருக்கையில் அமர்ந்திருக்கும்போது தேள் ஒன்று கொட்டியது.

உடனே வலியால் அலறினார் அப்பெண். ஏர் இந்தியா விமான  நிறுவன செய்தித் தொடர்பாளர், விமானம் தரையிறங்கியபின்ம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின்னர் வீடு திரும்பினார் என்று கூறினார்.

மேலும், எங்கள் அதிகாரிகள் அவர் மருத்துவமனைக்குச் சென்று வீடு திரும்பும்வரை  அனைத்து உதவிகளையும் செய்தனர் என்று தெரிவித்துள்ளார்.

அந்த விமானத்தில் இருந்த தேளை கண்டுபிடித்து நீக்கிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments