Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”சந்திரயான் 2 ராக்கெட் பாக்குறதுக்கு லீவ் கொடுங்க”.. கலெக்டரின் பதிவுக்கு கமெண்ட் அடித்த பள்ளி மாணவன்

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (16:50 IST)
கேரளாவில் பெய்து வரும் கனமழையால், பல பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில், விடுமுறை அளிக்கப்படாத ஒரு பள்ளி மாணவர் “சந்திராயன் 2 பறப்பதை பார்க்க லீவ் கொடுங்கள்” என கலெக்டரின் பதிவில் கமெண்ட் செய்துள்ளார்.

கேரளா மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், நான்கு மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோட்டயத்தில் சில பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட கலெக்டர் சுதீர்பாபு நேற்று விடுமுறை அறிவித்தார். அந்த அறிவிப்பை தனது ஃபேஸ்புக் பதிவில் நேற்று பகிர்ந்திருந்தார். இந்நிலையில் அந்த ஃபேஸ்புக் பதிவின் பின்னோட்டத்தில், விடுமுறை அளிக்கப்படாத பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களுக்கும் விடுமுறை அளிக்குமாறு கமெண்ட் செய்தனர்.

அந்த கமெண்டுகளில் ஒரு பள்ளி மாணவர், நாளை சந்திரயான் 2 விண்கலம் வானில் பாய்வதால், அதனை பார்ப்பதற்கு தனது பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு கேட்டுகொண்டார். மேலும் அந்த மாணவர், மழை மிகவும் கனத்து வருவதால் பள்ளியை ”கட்” அடித்து விட்டு வந்து பார்ப்பது மிகவும் சிரமம் என்பதால், மொத்த மாவட்டத்திற்கும் விடுமுறை அளியுங்கள் என கூறியுள்ளார். இவ்வாறு பல மாணவர்கள், கலெக்டர் சுதிர்பாபு-வின் பதிவில் கமெண்ட் செய்துள்ளனர், அந்த பதிவை, 200 நபர்களுக்கு மேல் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments