ஹாஸ்டலில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு பிரசவம்: ஒடிசாவில் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2019 (08:21 IST)
ஒடிசாவில் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் 8ஆம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் தாரிங்கிபடியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் மாணவிகள் சிலர் ஹாஸ்டலில் தங்கியும் படித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த 8ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் துடித்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், சிறிது நேரத்தில் குழந்தை பிற்ந்துவிடும் எனவும் தெரிவித்தனர். அதேபோல் சிறுமிக்கு சற்று நேரத்தில் குழந்தையும் பிறந்தது.
 
இதனால் ஆடிப்போன சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீஸார் அந்த ஹாஸ்டலின் வார்டன், சமையல் மாஸ்டர் உள்பட பலரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெடிகுண்டு சம்பவம் எதிரொலி: டெல்லி செங்கோட்டையில் பார்வையாளர்களுக்கு தடை.!

தங்கம் விலை மீண்டும் உச்சம்.. ஒரு சவரன் 93000ஐ தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

நேற்று ஒரே நாள் தான் ஏற்றம்.. இன்று மீண்டும் சரிந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ் நிலவரம்..!

டெல்லி குண்டுவெடிப்பில் பஸ் கண்டக்டர் மரணம்.. 8 பேர் கொண்ட குடும்பத்தில் வருமானம் பார்க்கும் ஒரே நபர்..!

டெல்லி குண்டுவெடிப்பு: நண்பரை காப்பாற்ற முயன்றதால் உடல் நிலை மோசமான இளைஞர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments