Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பரபரப்பு’ - ஒரு ரூபாய்க்காக தர்ம அடி!

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (09:09 IST)
கர்நாடக மாநிலம் துமகூருவில் இருந்து பெங்களூரு நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டு இருந்தது.


 


அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிக்கு நடத்துனர் ஒரு ரூபாய் சில்லரை கொடுக்கவில்லை. இதனால் அந்த பயணி நடத்துனரை  ஆபாச வார்த்தைகளால் திட்டி கொண்டே வந்துள்ளார். இதை கேட்டு சக பயணிகள் எரிச்சல் அடைந்தனர். மேலும், அந்த பயணியை தகாத வார்த்தைகளால் சிலர் திட்டினர்.

அதை கேட்டு எரிச்சலான அவர் சக பயணிகளையும் திட்டிவிட்டு, பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தை பேருந்து நெருங்கிய போது இறங்கி ஓட முயற்சி செய்தார். போபத்தில் சக பயணிகள் அவரை சுற்றி வளைத்த சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இது குறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அந்த பயணியை மீட்டு சக பயணிகளையும் சமரசம் செய்து அனுப்பினர். பின், கலவர காட்சி போல் காட்சியளித்த பேருந்துநிலையும் அமைதி நிலைக்கு திரும்பியது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments