Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. ஹரியானா காங்கிரஸ் அதிரடி..!

Siva
வியாழன், 22 பிப்ரவரி 2024 (07:59 IST)
ஹரியானாவில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஹரியானாவில் பாஜக கூட்டணி அரசு நடந்து வரும் நிலையில் திடீரென காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று இது குறித்து சட்டமன்றத்தில் விவாதம் செய்யப்பட உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 40 தொகுதிகளில் வென்ற பாஜக கூட்டணி அதன் பின் சில சுயேட்சைகள் தயவில் ஆட்சி அமைத்தது

இம்மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு 31 எம்.எல்.ஏக்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா  வாக்கெடுப்பு நடத்த கோரி உள்ளதை அடுத்து சுயேச்சைகள் பாஜகவுக்கு கொடுத்த ஆதரவை விலக்கி கொண்டார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையடுத்து நாளைய நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. உடலை தானமாக வழங்க கடிதம்..!

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது.. கழிவறையில் வழுக்கி விழுந்ததால் கை எலும்பு முறிவு..!

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு முற்றுகைப் போராட்டமா? விந்தையிலும் விந்தை: தவெக அறிக்கை..!

ஜூன் மாத சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் முன்பதிவு எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments