Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த குரங்கு.! "குரங்கு பாத்" என காங்கிரஸ் கடும் விமர்சனம்.!!

Senthil Velan
சனி, 3 ஆகஸ்ட் 2024 (12:26 IST)
புதிய நாடாளுமன்ற வளாகத்திற்குள் உள்ள நாற்காலியில் குரங்கு ஒன்று அமர்ந்திருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், மத்திய அரசை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
 
டெல்லியில் பெய்த கனமழையை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நீர் கசிவு ஏற்பட்டது. நாடாளுமன்ற லாபி பகுதியின் மேற்கூரையில் இருந்து நீர் கசிந்து கொண்டே இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை பிளாஸ்டிக் பக்கெட் வைத்து பிடித்து ஊழியர்கள் வெளியே கொட்டி வந்தனர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பியது. 
 
வெளியே வினாத்தாள் கசிவு உள்ளே மழைநீர் கசிவு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மழைநீர் கசியும் வீடியோவை எதிர்க்கட்சி எம்பிக்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கிண்டல் செய்தனர். நாடாளுமன்றத்தில் மழைநீர் கசிவு சர்ச்சையான நிலையில், தற்போது குரங்கு ஒன்று நாடாளுமன்றத்தில் நுழைந்து அட்டகாசம் செய்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 
வெள்ளிக்கிழமை பிற்பகல் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு (எம்.பி.க்கள்) ஒதுக்கப்பட்ட லாபியின் உள்ளே இருந்த நாற்காலியின் மீது குரங்கு ஒன்று அமர்ந்து அட்டகாசம் செய்தது. 

குரங்கு பாத்:

லாபிக்குள் குரங்கு சுற்றித் திரியும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்,  நியூ பார்லிமென்ட் கட்டிடம் என்று அழைக்கப்படும் மோடி மேரியட்டில் இன்று குரங்கு பாத் என்று பதிவிட்டுள்ளார்.
 
அதேபோல் குரங்கு இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராஜீவ் ரெட்டியும்,  டெல்லியில் கன மழையில் இருந்து  தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நாடாளுமன்றத்தில் குரங்கு ஒன்று தஞ்சம் அடைந்ததாகவும், ஆனால் நாடாளுமன்றத்திலும் தண்ணீர் கசிவைக் கண்டதாகவும் மத்திய அரசை விமர்சித்துள்ளார். 

ALSO READ: பட்டியலின மக்களின் உள் இடஒதுக்கீடு செல்லும்.! உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இபிஎஸ் வரவேற்பு..!!

நாடாளுமன்ற வளாகத்துக்குள் குரங்குகள் நுழைவது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments