கர்ப்பிணி மனைவியை பார்க்க மருத்துவமனைக்குள் டாக்டர் வேடமிட்டு சென்ற நபர்

Webdunia
ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 (09:55 IST)
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், தனது கர்ப்பிணி மனைவியை பார்க்க நபர் ஒருவர் மருத்துவமனைக்கு டாக்டர் வேடமிட்டு சென்றுள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நபர் ஒருவர் டாக்டர் கோட் அணிந்து திரிந்துள்ளார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகித்த போலீஸார், அவரை பிடித்து விசாரித்தனர். அந்த நபர் தான் ஒரு சீனியர் டாக்டர் என கூறியுள்ளார்.
 
இதனையடுத்து அந்த நபரிடம் போலீஸார் அடையாள அட்டையை கேட்டுள்ளனர். இதனால் பயந்துபோன அந்த நபர், தாம் டாக்டர் வேடமிட்டு வந்த உண்மையை ஒப்புக்கொண்டார்.
 
போலீஸார் அவரை கைது செய்து விசாரித்ததில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கர்ப்பிணி மனைவியை பார்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், டாக்டர் வேடமிட்டு தனது மனைவியை பார்க்க முயற்சித்தபோது தான் மாட்டிக் கொண்டதாக தெரிவித்தார். அந்த நபரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments