Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபானி புயலால் நிலச்சரிவு: மேற்குவங்கத்தில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 3 மே 2019 (09:37 IST)
ஃபானி புயல் தற்போது ஒடிஷா மாநிலத்தில் கரையை கடந்து வருவதால் அம்மாநிலத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் மேற்குவங்க மாநிலங்களிலும் பலத்த கனமழை பெய்து வருகிறது.
 
இந்த நிலையில் ஃபானி புயலின் எதிரொலியாக மேற்கு வங்கத்தில்  நிலச்சரிவு தொடங்கியுள்ளதாக திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இம்மாநிலத்தில் காலை 11 மணிக்கு ஃபானி புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அந்த நேரத்தில் நிலச்சரிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த 2009ஆம் ஆண்டு ஐலா புயல் மேற்குவங்கத்தை புரட்டி எடுத்தது போல் இந்த ஃபானி புயலும் மேற்குவங்கத்தில் பலத்த சேதங்களை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள், குடிசைப்பகுதிகள் கடுமையான சேதம் அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புயல் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற மேற்குவங்க அரசு சிறப்பான முன்னேற்பாடுகளை  செய்துள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடாளுமன்றத்தில் ‘எம்புரான்’ குறித்து காரசார விவாதம்: மக்களவை ஒத்திவைப்பு..!

தலைவர் பதவியை இழக்கும் அண்ணாமலை!? அடுத்த தலைவர் அந்த நடிகரா?

டெல்லியில் பளார் பளார் என அறை வாங்கிய அண்ணாமலை: அமைச்சர் சேகர்பாபு

2 ரயில்கள் நேருக்கு மோதி பெரும் விபத்து.. இரு ரயில்களின் டிரைவர்களும் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments