Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நண்பனோடு சேர்ந்து மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய கணவன்

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2018 (14:25 IST)
மகாராஷ்டிராவில் கணவன் ஒருத்தன் மனைவியை தனது நண்பனோடு சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம்  பன்வெல் நகரை சேர்ந்தவன்  ராகேஷ்(29). இவனுக்கு திருமணமாகிவிட்டது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மனைவியை பிரிந்து வாழ்கிறான்.
 
இந்நிலையில் ராகேஷ் தனது மனைவிக்கு போன் செய்து உன்னுடன் பேச வேண்டும் வீட்டிற்கு வா என கூறியுள்ளான். இதனை நம்பிய அவனது மனைவி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ராகேஷ் தனது மனைவிக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்ததை கலந்து கொடுத்துள்ளான். 
பின் கேடுகெட்ட செயலாய் நண்பனோடு சேர்ந்து தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளான்.  இதனை வெளியே கூறினால்  வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளான்.
 
துவண்டுபோகாத அவனது மனைவி, தனக்கு நேர்ந்த கொடுமைகளை காவல் நிலையத்திற்கு சென்று புகாராக அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அந்த அயோக்கியன் ராகேஷையும் அவனது நண்பனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Exam போகணும்.. ப்ளீஸ் நிறுத்துங்க! பேருந்துக்கு பின்னாலேயே ஓடிய மாணவி! - நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்.. என்ன காரணம்?

சென்னையில் அடுத்தடுத்து 7 இடங்களில் நகை பறிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

7வது நாளாக தொடர்ந்து உயர்ந்தது இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

5 நாட்களில் 1000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்