Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் இருந்து விழுந்து ப்ளாட்பார்மில் சிக்கிய மாணவி! – திருப்பதியில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (12:09 IST)
திருப்பதி அருகே கல்லூரி மாணவி ஒருவர் ப்ளார்பாரத்திற்கும், ரயிலுக்கும் இடையே சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அன்னவரம் பகுதியை சேர்ந்த சசிகலா என்ற பெண் துவ்வாடாவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கு ரயிலில் சென்று வரும் சசிக்கலா நேற்று குண்டூர் – ராயகடா எக்ஸ்பிரஸில் பயணித்துள்ளார்.

துவ்வாடா ரயில் நிலையத்தில் அவர் இறங்கியபோது கால் தவறியதில் ரயிலுக்கும், ப்ளாட்பாரத்திற்கும் இடையே சிக்கியுள்ளார். உடனே ரயில் நிறுத்தப்பட்டதுடன் மாணவியை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. சில மணி நேரங்கள் போராடியும் மாணவியை வெளியே எடுக்க முடியாததால் ப்ளாட்பாரத்தை உடைத்து மாணவியை மீட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் ரயில்கள் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நொண்டி, கூன், குருடு என ஒரு அமைச்சர் பேசுவதா? துரைமுருகனுக்கு வலுக்கும் கண்டனங்கள்..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு.. மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!

வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது வயிறு எரிய வேண்டுமா? காஸ் விலை உயர்வுக்கு முதல்வர் கண்டனம்..!

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments