Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆழ்கடலில் ஐந்து நாட்களாக கிடந்த மீனவர் – குலைநடுங்க வைக்கும் சம்பவம்

Webdunia
திங்கள், 15 ஜூலை 2019 (18:02 IST)
மீனவர் ஒருவர் படகு கவிழ்ததால் கடலில் மிதந்தபடியே கிடந்திருக்கிறார். அந்த பக்கமாக வந்த வங்கதேச கப்பல் ஒன்று அவரை காப்பாற்றியிருக்கிறது. நடந்த சம்பவங்களை அவர் சொன்னதும் கேட்டவர்களையே குலைநடுங்க செய்திருக்கிறது அவரது கதை.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ரபீந்திரநாத் தாஸ். மீனவரான இவர் வழக்கம்போல தனது நண்பர்கள் மற்றும் மருமகனுடன் மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றார். அன்று விதி அவர்கள் வாழ்க்கையை வேறு விதமாக முடிவு செய்திருந்தது. மீன் பிடித்து கொண்டிருந்த போது அமைதியாக இருந்த கடல் தனது ஆக்ரோஷத்தை காட்ட தொடங்கியது. மிக பெரிய அலைகள் அவர்களுடைய படகை தாக்கின. அலைகளின் கோர தாக்குதலை தாங்க முடியாத படகு உடைந்து மூழ்க தொடங்கியது.

உடனே சிலர் மட்டும் உயிர்பிழைக்க படகை விட்டு வெளியே குதித்தனர். மற்ற மீனவர்கள் படகோடு கடலுக்குள் மூழ்கி இறந்தனர். தப்பி பிழைத்த ஐந்து மீனவர்களும் படகிலிருந்து சிதறிய மர பாகங்களை பிடித்தபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அந்த வழியாக எந்த கப்பலும் உதவிக்கு வரவில்லை. பசியாலும், உடல் சோர்வாலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மீன்வராய் கடலில் மூழ்கி இறந்தனர். ரபீந்திர தாஸுக்கு தான் பிழைப்போம் என்ற நம்பிக்கையே போய்விட்டது. ஆனாலும் தனது மருமகனையாவது காப்பாற்றிவிட வேண்டும் என நினைத்தார். உடல் சோர்வுற்று நீந்த முடியாமல் கிடந்த அவரை தனது முதுகில் தாங்கியபடி, மிதந்த மூங்கில் கம்புகளை ஒன்றாக சேர்த்துகட்டி அதை பிடித்தபடி கடலில் மிதந்திருக்கிறார்.

5வது நாள் அவர் மருமகன் உடலில் எந்த அசைவும் இல்லை. எழுப்ப முயற்சித்த ரபீந்திரநாத் தாஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உணவில்லாமல் பசியில் வாடிய அவர் மருமகன் இறந்து விட்டிருந்தார். அதற்கு மேல் அவரை தாங்கி கொண்டிருப்பதில் பலனில்லை என்பதை உணர்ந்த அவர் அந்த உடலை கை விட்டார். நம்பிக்கையாய் இருந்த ஒருவனும் இறந்து கடலில் மூழ்கி போனான்.

தனது சாவை எதிர்நோக்கி காத்திருந்த ரபீந்திரதாஸுக்கு அதிர்ஷ்ட தேவை உதவிக்கரம் நீட்டினாள். திடீரென தூரத்தில் ஒரு கப்பல் வருவது தெரிந்தது. ரபீந்திரநாத்தால் கையை ஆட்டி கூட அந்த கப்பலை கூப்பிட முடியவில்லை. அவர் மிதந்து கொண்டிருந்த பக்கமே வந்த அந்த கப்பல் ரபீந்திரதாஸ் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து அவரை காப்பாற்றியது.
இது குறித்து பேசிய ரவீந்திரநாத் ”நான் காப்பாற்றப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்னால்தான் என் மருமகன் இறந்து போனார்.” என்று வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். நடுகடலில் உணவின்றி 5 நாட்களாக கிடந்தவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தையும், அவரது கதை சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து..!

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

அடுத்த கட்டுரையில்
Show comments