Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போனில் பேசியதால் பெற்ற மகளை தீர்த்துக்கட்டிய தந்தை

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (08:07 IST)
பஞ்சாப்பில் மகள் மீது ஏற்பட்ட சந்தேகத்தில், அவரது தந்தையே பெற்ற மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் குர்னே கர்ட் கிராமத்தை சேர்ந்தவர் ஜோகா சிங். இவரது மகள் குல்வந்த் கவுர். அதிக சந்தேக புத்தி கொண்ட ஜோகா தன் மகளின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்தார். குல்வந்த அதே பகுதியில் உள்ள வாலிபரை காதலிக்கிறார் என சந்தேகித்தார் ஜோகா.
 
இந்நிலையில் இரவில் வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிய பின்னர் குல்வந்த தனது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சட்டென்று விழித்த ஜோகா சிங், குல்வந்த தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருக்கிறாள் என நினைத்து ஆத்திரத்தில் பெற்ற மகள் என்றும் பாராமல், துப்பட்டாவால் குல்வந்தை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கொலை செய்யப்பட்ட குல்வந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக புத்தியால் பெற்ற மகளையே கொலை செய்த ஜோகா சிங்கை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - வங்கதேசம் இடையே முக்கிய பொருட்கள் இறக்குமதிக்குத் தடை.. அதிரடி உத்தரவு.

ராகுல் காந்தியின் செய்தி தொடர்பாளராக மாறிய முதல்வர் ஸ்டாலின்: குஷ்பு கடும் விமர்சனம்

மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி கேள்வி..!

மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்ப்போம்: விஜய்

ஆசிரியர் தகுதி தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments