Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கு.! சிபிஐக்கு மாற்றப்படுமா..? டிஜிபியிடம் பெற்றோர் மனு..!

Senthil Velan
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (16:57 IST)
புதுச்சேரியில் 9  வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வலியுறுத்தி சிறுமியின் பெற்றோர் டிஜிபியை சந்தித்து மனு அளித்தனர். 
 
கடந்த மாதம் 2 ந்தேதி புதுச்சேரி சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி காணாமல் போனார். பின்னர் வீட்டருகே சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்து வாய்க்காலில் வீசிய விவேகானந்தன் மற்றும் கருணாஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
 
இந்த வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி கலைச்செல்வனை சிறப்பு புலனாய்வு அதிகாரியாக நியமித்து அவரது தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ALSO READ: ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன்..! அமலாக்கத்துறைக்கு சரமாரி கேள்வி..!!
 
இந்நிலையில் சம்பவம் நடந்து 30 நாட்கள் ஆகியும் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும், முதல் தகவல் அறிக்கையோ அல்லது உடற்கூறாய்வு அறிக்கையோ கேட்டும் இதுவரை காவல் துறையினர் வழங்கவில்லை எனக்கூறியும், இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரியும் சிறுமியின் பெற்றோர் காவல் துறை தலைமை அலுவலகத்தில் டிஜிபி-ஐ சந்தித்து புகார் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்