ஜெகன்மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு.!

Senthil Velan
வெள்ளி, 12 ஜூலை 2024 (17:17 IST)
தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ அடுத்த புகாரியின் பேரில், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. தெலுங்கு தேசம் அபார வெற்றி பெற்று முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.

இந்நிலையில்  தன்னை கொலை செய்ய, ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் கிரிமினல் சதி செய்ததாக தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ., ரகுராம கிருஷ்ண ராஜூ என்பவர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

2021ல் வழக்கு ஒன்றில் தான் கைதான போது, முதல்வர், போலீசார் கொலை செய்ய சதி செய்ததாகவும், சிறையில் வைத்து கொடுமைப்படுத்தியதாகவும் கூறியிருந்தார்.

ALSO READ: நிலச்சரிவால் ஆற்றில் கவிழ்ந்த பேருந்துகள்..! 7 இந்தியர்கள் உள்பட 63 பேரின் கதி என்ன.?
 
இந்த புகாரின் பேரில் ஜெகன்மோகன் ரெட்டி, ஐபிஎஸ் அதிகாரிகள் பிவிசுனில்குமார்,# பிஎஸ்ஆர் சிதாராமஞ்சநெயிலு மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் விஜய்பால், குண்டூர் அரசு மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளர் பிரபாவத் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

உச்சம் சென்ற வெள்ளி விலையில் திடீர் சரிவு.. தங்கத்தின் நிலவரம் என்ன?

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? டிசம்பர் 24-ல் அறிவிப்பு: ஓபிஎஸ் தகவல்; பாஜக சமரசம் எடுபடவில்லையா?

கேரள நடிகை பாலியல் வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு.. எத்தனை ஆண்டு சிறை?

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கிஸ் முகமதி கைது: ஈரான் அரசு அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments