சரியாக படிக்காத மாணவியை அடித்த ஆசிரியர். வழக்கு போட்ட பெற்றோர்..!

Mahendran
சனி, 31 ஆகஸ்ட் 2024 (11:48 IST)
சரியாக படிக்காத மாணவியை ஆசிரியர் அடித்த நிலையில் அவர் மீது மாணவியின் பெற்றோர் வழக்கு பதிவு செய்துள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாகான் என்ற கிராமத்தில் உள்ள ஆறு வயது சிறுமி நன்றாக படிக்கவில்லை என்றும் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்றும் அவரது ஆசிரியர் சிறுமியை அடித்துள்ளார்.

இதனை அடுத்து வீட்டுக்கு வந்த சிறுமி, ஆசிரியர் அடித்து விட்டதாக தனது தாயாரிடம் கூறி அழுத நிலையில், இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் அளித்தார்.

இதனை அடுத்து ஆசிரியர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் ஆசிரியரிடம் காவல்துறை விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments