Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் சிலைக்கு ரூ.11 கோடி மதிப்புள்ள கிரீடத்தை நன்கொடையாக அளித்த வியாபாரி!

Sinoj
செவ்வாய், 23 ஜனவரி 2024 (18:38 IST)
அயோத்தி ராமர் சிலைக்கு வைர வியாபாரி ஒருவர் ரூ.11 கோடி மதிப்புள்ள கிரீடத்தை நன்கொடையாக அளித்துள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தில் ராமர் கோவில் பிராணண பிரதிஷ்டை விழா  நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில், பிரதமர் மோடி  பால ராமர் சிலைக்கு பூஜை செய்தார். அதன்பின்னர்,  உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத், ஆளு நர் ஆனதிபென் படேல், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பூஜை செய்து வழிபட்டனர்.

இந்த நிகழ்ச்சியையொட்டி,  நாடு முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயிலுக்கு பலரும் நன்கொடை அளித்து வரும்  நிலையில், குஜராத்  மாநிலத்தைச் சேர்ந்த வைர வியாபாரி முகேஷ் படேல், அயோத்தி ராமர் சிலைக்கு ரூ.11 கோடி மதிப்புள்ள கிரீடத்தை நன்கொடையாக அளித்துள்ளார்.

இந்த கிரீடம் 6 கிலோ எடைகொண்டதாகும், இதில், வைரல், தங்கம்  மற்றும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சமீபத்தில்  தியேட்டரில் ரிலீஸான ஹனு-மான் படத்திற்கு  தற்போது வரை விற்பனையான  53,28,211 டிக்கெட்டுகளில் இருந்தும் ரூ. 5 ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் கிடைத்த ரூ.2.66 கோடியை ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்குவதாக  நேற்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments