Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயை கொன்றுவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்ட மகன்

Webdunia
சனி, 30 டிசம்பர் 2017 (13:07 IST)
கேரளாவில் செலவுக்கு பணம் கொடுக்காததால் பெற்ற தாயை கழுத்தை நெரித்து கொன்ற மகனை  போலீஸார் செய்துள்ளனர்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் தீபா(50). இவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் வெளிநாட்டில் கல்லூரியில் படிக்கிறார். மகன்  அக்‌ஷய்(22) திருவனந்தபுரத்தில் உள்ள பொறியியல் கல்லுாரியில் படிக்கிறார். சமீபத்தில், அக்‌ஷய் தன் தாயாரிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளான். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அக்‌ஷய் பெற்ற தாய் என்றும் பாராமல் அவரின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளான்.
 
இதன்பின் குப்பை எரிக்கும் இடத்தில் சடலத்தைக் கொண்டு சென்று மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளான். மற்றவர்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க தனது தாய் தீபா காணவில்லை என போலீஸில் புகார் அளித்தான். விசாரணையின் போது போலீஸாருக்கு அக்‌ஷயின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. போலீஸ் பாணியில் அவனை விசாரிக்கவே தாயாரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். தாயை கொலை செய்து எரித்த பிறகு வீட்டில் ஆம்லெட் சாப்பிட்டதாகவும், பின்னர் வெளியில் சென்று நண்பர்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டதாகவும் அக்‌ஷய் வாக்குமூலம் அளித்துள்ளான். இதையடுத்து அக்‌ஷயை கைது செய்த போலீசார் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை வளர்க்க மிகவும் கஷ்டப்படுகின்றனர், ஆனால் பெற்ற தாயையே கொள்ள எப்படி மனம் வந்தது இந்த கொடூரனுக்கு. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என துடித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி: அமைச்சர் தங்கம் தென்னரசு

வீட்டுக்கு திருட்டு கரண்ட் எடுத்த சமாஜ்வாடி எம்.பி..! அபராதம் விதித்த மின்வாரியம்!

அம்பேத்கர் குறித்த அமித்ஷா உரையை நீக்க எக்ஸ் நிறுவனம் மறுப்பு.. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்..!

உக்ரைன் உடனான போரை நிறுத்திக் கொள்ள தயார்! சமரசத்துக்கு வரும் புதின்? ட்ரம்ப்தான் காரணமா?

நாளை முதல் சென்னையில் இருந்து பினாங்கு தீவுக்கு நேரடி விமானம்..நிறைவேறிய நீண்டநாள் கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments