Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் குண்டுவெடிப்பு! பெரும் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (18:48 IST)
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் குண்டுவெடிப்பு! பெரும் பரபரப்பு
டெல்லியில் ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் தலைநகரம் மிகவும் பரபரப்பாக இருக்கும் நிலையில் தற்போது டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே திடீரென குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த குண்டு வெடிப்பு காரணமாக 4 கார்கள் சேதமடைந்துள்ளதாகவும் ஒருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர் 
இப்போதுவரை குண்டுவெடிப்பிற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியது யார்? எத்தனை பேர் நிகழ்த்தினார்கள்? என்னென்ன சேத விவரங்கள்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லி எல்லைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் திடீரென இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments