Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுமி

Webdunia
திங்கள், 15 ஜனவரி 2018 (14:45 IST)
ஹரியானா மாநிலத்தில் கடந்த வாரம் காணாமல் சிறுமியை போலீஸார் தேடி வந்த நிலையில் அவரை கூட்டு பலாத்காரம் செய்து கொன்று வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் ஜன்சா என்ற கிராமத்தில் தையல் தொழிலாளி ஒருவர் வசித்து வந்தார். அவரது மகள் அருகிலுள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.  அவரது மகள் 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இது தொடர்பாக சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஊருக்கு அருகே உள்ள கால்வாயில் சிறுமி பிணமாக மிதந்தார். 
 
சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. பிரேத பரிசோதனையில் சிறுமி ஒரு கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு முகம், கழுத்து, உதடு, மார்பு பகுதி என உடலில் 19 இடங்களில் காயம் இருந்ததும் தெரியவந்துள்ளது. அவரது உடலுக்குள் இரும்பு கம்பி செலுத்தப்பட்ட நிலையில், நுரையீரல் பகுதி முற்றிலும் சிதைந்து இருந்தது. போலீசார் இந்த கொடூர செயலை செய்த காம மிருகங்களை தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார் டயர் பஞ்சர் பார்க்க சென்றவருக்கு ரூ.8000 நஷ்டம்.. இப்படி கூட ஒரு மோசடியா?

இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பது அநியாயம்: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்..!

தங்கமுலாம் பூசிய வாஷிங் மிஷின் வாங்கி தா.. கள்ளக்காதலி கேட்டதால் கொலை..!

இந்தியாவுடன் இனி வர்த்தக பேச்சுவார்த்தை இல்லை.. டிரம்ப் போட்ட அடுத்த குண்டு?

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments