Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சவுதியில் பட்டினி கிடக்கும் 800 இந்தியர்கள்

சவுதியில் பட்டினி கிடக்கும் 800 இந்தியர்கள்
, ஞாயிறு, 31 ஜூலை 2016 (15:00 IST)
சவுதி அரேபியா ஜெட்டா நகரில் 800 இந்தியர்கள் பட்டினி கிடப்பதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு ட்விட்டரில் ஒருவர் தகவல் அனுப்பியுள்ளார்.


 

 
ஏற்கனவே இந்தியர்கள் அதிக அளவில் வேலை இல்லாமல் சவுதி அரேபியாவில் கஷ்டப்பட்டு அருவதாக தகவல் வெளியானது. தற்போது ஜெட்டா நகரில் 800 இந்தியர்கள் பட்டினியில் வாடுவதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு ட்விட்டரில் ஒருவர் தகவல் அனுப்பியுள்ளார்.
 
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பட்டினியால் வாடும் இந்திய தொழிலாளர்களுக்கு இலவச உணவுப் பொருள் வழங்க ரியாத் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு உத்தர விட்டுள்ளேன். வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங் அங்கு செல்கிறார். சவுதி அரேபியாவில் இந்தியத் தொழிலாளர்களை பட்டினியால் தவிக்க விடமாட்டோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்க மாணவி கற்பழிப்பு: சினிமா இயக்குனர் குற்றவாளி என தீர்ப்பு