Webdunia - Bharat's app for daily news and videos

Install App

SBI வங்கியில் 8,424 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்கள்! – உடனே அப்ளை பண்ணுங்க!

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (09:03 IST)
பாரத ஸ்டேட் வங்கியில் அவ்வபோது பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில் தற்போது ஜூனியர் அசோசியேட்ஸ் பணிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.



மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) இந்தியாவிலேயே அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட பல கிளைகளை கொண்ட வங்கி ஆகும். இதில் தற்போது வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனைக்கான ஜூனியர் அசோசியேட்ஸ் பணிகளுக்காக 8,424 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இட ஒதுக்கீட்டின்படி எஸ்.சி பிரிவினருக்கு 1,284 பணியிடங்கள், எஸ்.டி பிரிவினருக்கு 748 பணியிடங்கள், ஓபிசி பிரிவினருக்கு 1919 பணியிடங்கள், ஈ.டபிள்யூ.எஸ் பிரிவினருக்கு 817 பணியிடங்கள், பொதுப்பிரிவில் 3,515 பணியிடங்கள் என மொத்தம் 8,424 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.04.2023 தேதி கணக்கின்படி 20 வயதுக்கு குறைந்தவராகவோ 28 வயதுக்கு அதிகமானவராகவோ இருக்க கூடாது. அதாவது 02.04.1995 முதல் 01.04.2023க்குள் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

இதில் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படுகிறது.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களில் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டியது அவசியம்.

விண்ணப்பிக்கும் நபர்கள் முதலில் Preliminary Exam (100 Marks) வைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டு அடுத்து மெயின் தேர்வுகள் நடைபெறும். அதன்பின்னர் எஸ்பிஐ வங்கியில் அப்ரெண்டிஸ் பயிற்சி அளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ ஜூனியர் அசோசியேட்ஸ் பணிக்கு விண்ணப்பிப்பது குறித்து மேலும் அறிந்து கொள்ள இந்த லிங்கை சொடுக்கவும். https://bank.sbi/documents/77530/36548767/161123-JA+2023-Detailed+Advt.pdf/926d28be-7df8-36f3-7113-344404668498?t=1700129762521

 
Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அதானி நிறுவனத்திற்கும் தமிழக மின்வாரியத்திற்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

இன்றிரவு 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments