Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் மாநிலத்தில் மழைவெள்ளத்தால் 70 பேர் பலி

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2015 (16:34 IST)
குஜராத் மாநிலத்தில் பருவ மழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கிந்திய மாநிலமான குஜராத்தில் இந்த வெள்ளத்தின் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 10,000 பேர் மேடான பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நிவாரணப்பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பருவமழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்தது ஆகியவற்றினாலேயே பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்புகள் தவிர, கால்நடைகள் மற்றும் பயிர்களும் பரந்துபட்ட அளவில் மிக அதிகமாக அழிந்துள்ளன என்றும் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத வகையில் சௌராஷ்ட்ரா பகுதியில் இப்போது மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கரையோர மாவட்டமான அம்ரேலியே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு மட்டும் 600 கிராமங்கள் நீரால் சூழப்பட்டுள்ளதாக குஜராத்தின் சுகாதார அமைச்சர் நிதின் பட்டேல் பிபிசியின் ஹிந்தி சேவையின் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! – மிஸ் பண்ணிடாதீங்க!

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

Show comments