கோவில் பிரசாதம் சாப்பிட்ட 7 பேர் பலி: பெரும் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (20:39 IST)
கர்நாடக மாநிலத்தில் கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 7 பேர் பலியானதாகவும், நூற்றுக்கும் அதிகமானோர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளதாகவும் வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் சபரிமலை, மேல்மருவத்தூர் செல்லும் பக்தர்கள் அங்கிருந்த கோவில் ஒன்றில் வழிபாடு செய்தனர். அப்போது அந்த கோவிலில் பூஜை முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை நூற்றுக்கணக்கானோர் வாங்கி சாப்பிட்டனர்.

பிரசாதம் சாப்பிட்ட சில நிமிடங்கள் பக்தர்கள் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டதால் அனைவரும் அருகில் இருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அட்மிட் ஆனதால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் சிகிச்சை அளிக்க திணறினர். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி 7 பேர் பலியானதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இன்னும் சிலர் அபாய கட்டத்தில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறதூ.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பிரசாதம் தயாரித்தவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரியில் சுகாதாரமற்ற நீர்! 7 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்! - கல்லூரியை மூட உத்தரவு!

தீபாவளியை முந்திக் கொண்டு வரும் பருவமழை! - வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

4 மாவட்டங்களுக்கு காத்திருக்கிறது மழை! வானிலை ஆய்வு மையம்!

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments