Webdunia - Bharat's app for daily news and videos

Install App

68,000 கற்பழிப்பு வழக்குகளில் 16,000 பேருக்கு மட்டுமே தண்டனை!

Webdunia
ஞாயிறு, 3 பிப்ரவரி 2013 (13:32 IST)
FILE
2009 முதல் 2011 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 68,000 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் வெறும் 16,000 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

த ேச குற்றப் பதிவுகளை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியின்படி, 2011 ஆம் ஆண்டில் மட்டும் 24,206 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 5,724 பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல, 2010 ஆண்டில் 22,172 கற்பழிப்பு வழக்குகளும், 5,632 பேரும் தண்டனை பெற்றுள்ளனர். 2009 ஆம் ஆண்டில் 21,397 கற்பழிப்பு வழக்குகளும், 5,316 பேர் தண்டனையும் பெற்றுள்ளனர்.

2009-2011 இடைப்பட்ட ஆண்டில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 9,539 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 2,986 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதே கால‌த்‌தி‌ல் மேற்கு வங்கத்தில் 7,010 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், வெறும் 381 பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments