Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த 4 பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த 4 பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
, புதன், 15 ஏப்ரல் 2015 (21:04 IST)
ஹரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்திலுள்ள ராகிகரி கிராமத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 10 வயது குழந்தை உட்பட 4 பேரின் எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



 

 
ஹரியானா தொல்பொருள் ஆராய்ச்சித் துறை, தென் கொரியாவின் சியோல் தேசிய பல்கலைகழகம் மற்றும் புனேவில் உள்ள டெக்கான் கல்லூரியுடன் இணைந்து நடத்திய அகழ்வாராய்ச்சியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த  4 பேரின் எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
 
5 அடி 6 அங்குலம் உயரம் கொண்ட, 50 வயதுடைய 2 ஆண் எலும்புக்கூடுகள், 5 அடி 4 அங்குலம் கொண்ட ஒரு பெண், மற்றும் ஒரு 10 வயது குழந்தை உட்பட இந்த எலும்புக்கூடுகள் அனைத்தும் டி.என்.ஏ சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

webdunia

 

 
இந்த கிராமத்தில் 2012 ஆம் ஆண்டிலிருந்து  ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்த 4 எலும்புக்கூடுகள் தவிர்த்து உணவு தானியங்கள், வளையல்கள், பொம்மைகள், சக்கரங்கள், மண்பாண்டங்கள் மற்றும் பல்வேறு அளவுகளில் கவண் எறிய பயன்படும் பந்துகள் உட்பட புலிச்சின்னம் பொறித்த இலச்சினையும் கிடைத்துள்ளது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டடுள்ள இந்த எழும்புக் கூடுகள் ஹரப்பா நாகரீக காலத்தைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil