Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரான் பரவலால் 5 மாநில தேர்தல்கள் தள்ளி வைப்பா? தேர்தல் ஆணையம் ஆலோசனை

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (10:18 IST)
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து ஐந்து மாநில தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 
 
உத்தரப் பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் தேர்தல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக மிக வேகமாக ஒமிக்ரான் பரவி வருவதை அடுத்து தேர்தலை தள்ளி வைக்க நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தி இருந்தது 
 
இந்த நிலையில் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர்களுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்
 
பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள தேர்தல் ஒமிக்ரான் காரணமாக இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பன் பாலம் திறப்பு எதிரொலி: தாம்பரம் - ராமேஸ்வரம் ரயில் குறித்த அறிவிப்பு..!

பிலால் கடையில் சாப்பிட்டவர்கள் 55 பேர் பாதிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

நாளை கும்பாபிஷேகம்.. இன்று வெள்ளி வேல் திருட்டு..மருதமலை முருகன் கோவிலில் பரபரப்பு..!

வீடு கட்டுறதா சொன்னாங்க.. கடைசில பாத்தா டாஸ்மாக்! - மக்களுக்கே விபூதி அடித்த அதிகாரிகள்!

வக்பு மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடர்வோம்: சட்டமன்றத்தில் முதல்வர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments