Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5.5 கோடி செலவில் முதல்வருக்கு சொகுசு பஸ் தேவையா? – தற்கொலை செய்துகொண்ட விவசாயி கடிதம்

5.5 கோடி செலவில் முதல்வருக்கு சொகுசு பஸ் தேவையா? – தற்கொலை செய்துகொண்ட விவசாயி கடிதம்
, சனி, 9 ஜூலை 2016 (15:53 IST)
5.5 கோடி செலவில் முதல்வருக்கு சொகுசு பஸ் தேவையா என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விவசாயி சிம்ஹாரி வெங்கடேஸ்வர் ராவ், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த 49 வயதான சிம்ஹாரி வெங்கடேஸ்வர் ராவ் புகையிலை விளைவிக்கும் விவசாயி. அவர் தனது மகனுடைய படிப்பு செலவுற்காகவும், குத்தகைக்கு எடுத்த 33 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதற்காகவும் கடன் பெற்றிருதார். அந்த கடனை திருப்பி தர முடியாமல் போன நிலையில், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

ஆனால் தற்கொலைக்கு முன் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் அவர் முதலமைச்சருக்கு எதிராக வினாவை எழுப்பி உள்ளார்.

முதலமைச்சர், தனது சொந்த பாதுகாப்புக்காக ரூ.5.5 கோடி செலவிட்டு பஸ் (மாநில போக்குவரத்து) ஒன்றை மாற்றி அமைத்து ஹட்ஹட் (Hudhud) புயலின் தாக்கத்தை கண்காணிக்க சென்றார். அவரது வாழ்க்கை மிகவும் மதிப்புமிக்க இருந்தால், ஒரு புகையிலை விவசாயி தற்கொலை செய்வதன் மூலம் அவரது குடும்ப தெருவிற்கு கொண்டு வரப்படும் என்பதை அறிய வேண்டும் என ராவ் எழுதி இருந்தார். தன்னைப் போல் மேலும் 14,000 புகையிலை விளைவிக்கும் விவசாயிகள் இருப்பதாக கூறிப்பிட்டுள்ளார்.

ஆந்திரப் பிரதேசம் அனந்தபூர் மற்றும் குண்டூர் போன்ற மாவட்டங்களில் இருந்து தற்கொலை, மரணங்கள் தகவல்கள் அதிகரித்தே உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக மாவட்டச் செயலாளருக்கு ஆப்பு அடித்த கருணாநிதி