மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (21:05 IST)
புதுச்சேரியில் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்ட 40 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது என்பதும் வரும் அக்டோபர் மாதம் மூன்றாவது அலை தோன்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இருந்தாலும் பலரும் கொரோனா வைரஸ் விதிமுறைகளை மதிக்காமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி அடுத்த சோரியாங்குப்பத்தில் விநாயகம் என்பவரது மகள் மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது என தெரிய வந்துள்ளது.
 
இதனையடுத்து புதுவை மாநில சுகாதாரத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் முகாமிட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாலையில் மீண்டும் குறைந்த தங்கம்.. இன்று ஒரே நாளில் 3000 ரூபாய் சரிவு..!

ஒரே இரவில் இந்திய இளைஞர் கோடீஸ்வரர் ஆன அதிசயம்.. ஐக்கிய அரபு அமீரகம் கொடுத்த ஜாக்பாட்..!

பவர் பாலிடிக்ஸ்! வெடிக்கும் கோஷ்டி மோதல்... கிருஷ்ணகிரி உபிகளுக்கு டிமிக்கி கொடுக்கும் அமைச்சர் சக்கரபாணி!

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!

மெஸ்ஸி ஏன் வரவில்லை.. கேள்வி கேட்ட நிருபரை தள்ளிய கேரள விளையாட்டு துறை அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments