Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் இன்று ஒரே நாளில் 37,290 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (17:45 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் தென்னிந்தியாவைப் பொருத்தவரை தமிழகம் கேரளம் கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களில் மிக அதிகமாக பரவி வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் இன்று ஒரே நாளில் 37,290 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் ஒரு 79 பேர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று ஒரே நாளில் கேரளாவில் 1,39,287 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் இன்று மட்டும் 32,978 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளதாகவும் கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
கேரள மாநிலத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் 30 ஆயிரத்தை தாண்டி கொண்டிருக்கிறது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் சில அதிரடி முடிவுகளை எடுக்க கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments