Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 வயதில் ரூ.47 லட்சம் லஞ்சம்.. ஐஏஎஸ் அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்..!

Mahendran
திங்கள், 9 ஜூன் 2025 (10:20 IST)
ஒடிசாவில், 30 வயதான IAS அதிகாரி ஒருவர் துணை கலெக்டராக பணி செய்து வரும் நிலையில், அவர் 47 லட்ச ரூபாய் லஞ்சமாக வாங்கியதாக கையும் களவுமாக பிடிப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒடிசா புலனாய்வுத் துறை அதிகாரிகள், தொழில் அதிபர் ஒருவரிடம் இருந்து ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கிய போது சுற்றி வளைத்தனர். தொழில் அதிபர் ஒருவரிடம்,  தொழில் அனுமதி தருவதற்காக 20 லட்சம் லஞ்சம் பேசி, 10 லட்ச ரூபாயை தனது அரசு இல்லத்திற்கு வரவழைத்து, அந்த லஞ்ச தொகையை பெற்றதாகவும், அப்போது புலனாய்வுத்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்ததாகவும் தெரிகிறது.
 
இதை அடுத்து, அவரது வீட்டில் சோதனை செய்தபோது, 47 லட்ச ரூபாய் கணக்கில் வராத பணம் கண்டெடுக்கப்பட்டதாகவும், இதனை அடுத்து, அவர் மீது ஊழல் தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெறும் 30 வயதில் 47 லட்ச ரூபாய் லஞ்ச பணம் வாங்கி உள்ளதாக கூறப்படுவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் மிரட்டலால் எந்த பிரச்சனையும் இல்லை.. மீண்டும் உயரும் பங்குச்சந்தை..

ரஷ்யாவிடம் இருந்து யுரேனியம் இறக்குமதி? எனக்கு தெரியாது.. இந்தியா குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதில்..

2 பேருந்துகளுக்கு இடையே சிக்கி நசுங்கிய ஆட்டோ.. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நால்வர்..!

பிரதமர் மோடிக்கு ராக்கி கட்ட காத்திருக்கும் பாகிஸ்தான் சகோதரி.. அழைப்பு வருமா?

எதிரி நாடு சீனாவுக்கு சலுகை.. நட்பு நாடு இந்தியாவுக்கு வரிவிதிப்பா? முன்னாள் அமெரிக்க தூதர் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments