Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒடிசா மாநிலத்தில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது: 30 கிராமிய கலைஞர்கள் இறப்பு

ஒடிசா மாநிலத்தில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது: 30 கிராமிய கலைஞர்கள் இறப்பு
, திங்கள், 18 ஏப்ரல் 2016 (16:15 IST)
உள்ளூர் ஜாத்ரா கிராமிய கலைஞர்கள் குழுவை ஏற்றி மலைப் பாதையில் சென்ற பேருந்து 200-250 அடி டைல்பானி காலா காட் என்ற பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.


 
 
கடந்த ஞாயிற்று கிழமை 38 பயணிகளை கொண்டு பாரதிய ஜனத்திய கிராமிய கலைஞர்கள் குழுவை சுமந்து சோகிலா, பார்கார்க் மாவட்டத்தை நோக்கி சென்ற பேருந்து 200-250 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த்து.
 
ஜாத்ரா கிராமிய கலைஞர்கள் குழு சனிக்கிழமை இரவு டியோகர் கிராமத்தில் ஒரு நிகழ்ச்சியை முடித்து விட்டு திரும்பினர். அப்பொழுது ஞாயிற்று கிழமை கலை 6.30 மணியளவில் டியோகர் நகரத்தில் இருந்து 18 கிமீ சுற்றளவில் ஒரு செங்குத்தான வளைவில் திருப்ப முயன்ற போது விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
 
டியோகர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சர்மா இதுவரை விபத்து நடந்த இடத்தில் இருந்து 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் இந்த விபத்தில் உயிர் தப்பியவர்களுக்கு அதிக இடங்களில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
 
குறைந்தது ஏழு பயணிகள் நிலை மிகவும் மோசமாக உள்ளது, என்று சர்மா கூறினார். ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் காயம் அடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil