Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து இரத்த வெள்ளத்தில் தவிக்க விட்ட 22 வயது காமுகன்!

3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து இரத்த வெள்ளத்தில் தவிக்க விட்ட 22 வயது காமுகன்!

Webdunia
வியாழன், 4 மே 2017 (16:31 IST)
சில மாதங்களுக்கு முன்னர் தலைநகர் சென்னையில் போரூர் அருகே ஹாசினி என்ற 7 வயது சிறுமி வாலிபர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் சென்னையையே உலுக்கியது.


 
 
இந்நிலையில் அதேபோன்ற ஒரு சம்பவம் நாட்டின் தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது. 3 வயது சிறுமியை 22 வயது இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
டெல்லி நேரு நகர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று தனது வீட்டின் அருகே அந்த சிறுமி விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த சிறுமியை பக்கத்து வீட்டில் உள்ள 22 வயது இளைஞன் ஒருவன் தனது வீட்டிற்கு தூக்கிக்கொண்டு சென்றுள்ளான்.
 
பின்னர் தனது வீட்டில் வைத்து 3 வயது சிறுமியை மிருகத்தனமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனையடுத்து அந்த இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.
 
பின்னர் இரத்த வெள்ளத்தில் சிறுமி கிடந்ததை பார்த்த பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். காவல்துறைக்கு தகவலும் அளித்தனர். குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை அவனை கைது செய்தனர்.
 
இதனையடுத்து அந்த இளைஞனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கூறி வருகின்றனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டப்பேரவையில் முதலமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் விவாதம்.. முழு விவரங்கள் இதோ:

2024 டிசம்பர் மாதத்திற்கான வரிப்பகிர்வை விடுவித்தது மத்திய அரசு.. தமிழகத்திற்கு எவ்வளவு?

90 மணி நேரம், ஞாயிறு வேலை ஏன்? L&T செய்தி தொடர்பாளர் அளித்த விளக்கம்..!

ரூ.40 ஆயிரம் கோடி மின் கட்டணம் உயர்த்தியும் ரூ.4435 கோடி நஷ்டம்.. மின்வாரியம் குறித்து அன்புமணி

கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு: பள்ளி தாளாளர்-முதல்வர் ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்