Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு 3 ஆண்டுகள் பயிற்சி கட்டாயமா? அதிர்ச்சியில் மாணவர்கள்..!

Siva
செவ்வாய், 11 ஜூன் 2024 (09:16 IST)
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோர் ஏற்கனவே உள்நாட்டில் ஒரு ஆண்டு பயிற்சி பெற வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில் வெளிநாடுகளில் இணைய வழியில் மருத்துவம் பயின்றிருந்தால் அவர்கள் மூன்று ஆண்டுகள் உள்நாட்டில் பயிற்சி பெறுவது கட்டாயம் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது மருத்துவ மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் இணைய வழியில் படித்திருந்தால், இந்திய பல்கலைக்கழகங்களில்  சான்றுகளை சமர்ப்பித்து தகுதி தேர்வில் பங்கேற்று மருத்துவர் ஆகலாம் என்று தான் இதுவரை நடைமுறை இருந்தது.

ஆனால் தற்போது அந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டு வெளிநாடுகளில் இணைய வேளையில் பயிற்சி பெற்றவர்கள் இனிவரும் காலங்களில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கட்டாய இன்டர்ன்ஷிப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

இது வெளிநாட்டில் மருத்துவம் படித்து வரும் மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments