Webdunia - Bharat's app for daily news and videos

Install App

70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 29 வயது இளைஞர்.. கொள்ளையனின் கொடூர செயல்..!

70 வயது மூதாட்டி
Siva
புதன், 28 ஆகஸ்ட் 2024 (07:32 IST)
70 வயது மூதாட்டி தனியாக இருக்கும் வீட்டில் கொள்ளை அடிக்க வந்த கொள்ளையன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்தது மட்டுமின்றி அந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள ஆலப்புழா என்ற மாவட்டத்தில் 70 வயது மூதாட்டி தனியாக வசித்து வந்த நிலையில் தனேஷ் என்ற 29 வயது வாலிபர் நோட்டமிட்டு அந்த வீட்டில் கொள்ளை அடிக்க திட்டமிட்டார்.

கடந்த சனிக்கிழமை இரவில் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து கொண்டு அவரது வீட்டுக்குள் சென்ற தனேஷ் அவர் மீது மிளகாய் பொடியை தூவி ஏழு பவுன் நகை மற்றும் சில பொருட்களை கொள்ளையடித்தார். அதன் பின் அந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதை கேள்விப்பட்டு உடனே காவல்துறைக்கு தகவல் அளித்த நிலையில் காவல்துறை இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

இந்த நிலையில் கொள்ளையடித்த தங்க நகையை கடையில் விற்க முயன்ற போது தனேஷை போலீசார் கைது செய்ததாகவும் அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

70 வயது மூதாட்டியை 29 வயது வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: தென்னாப்பிரிக்காவை துவம்சம் செய்த மே.இ.தீவுகள் அணி.. தொடரையும் வென்றது..!

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்