Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 நாட்களில் உக்ரைன் செல்லும் 26 இந்திய விமானங்கள்!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (11:46 IST)
அடுத்த 3 நாட்களில் மாணவர்களை அழைத்து வர 26 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் தகவல். 

 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து உக்ரைனுக்கு படிக்க சென்ற மாணவர்கள் பலர் அங்கு சிக்கியுள்ளனர். மாணவர்கள் பலர் அண்டை நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து இந்திய அரசின் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தில் இயக்கப்படும் விமானங்கள் வழியாக இந்தியா திரும்பி வருகின்றனர்.
 
இந்நிலையில் இதுவரை 12,000 மாணவர்கள் உக்ரைனை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், கீவ்வில் இருந்து அனைத்து மாணவர்களும் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், மத்திய அரசு தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 60% மாணவர்கள் வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில் போர் உக்கிரமாக நடந்து வரும் கார்கிவ், சுமி பகுதியிலும் இன்னுமும் இந்திய மாணவர்கள் மீட்கப்படாமல் உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
மேலும், அடுத்த 3 நாட்களில் மாணவர்களை அழைத்து வர 26 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் சிரிங்கலா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலியுடன் உல்லாசம்; கணவனின் லீலைகளை வீடியோ எடுத்த மனைவிக்கு கணவன் கொடுத்த தண்டனை!

2026ல் ஆட்சியமைக்க வேண்டுமென்றால் அதிமுக தலைமை மாற்றப்பட வேண்டும்: ஓபிஎஸ் ஆவேசம்

மருந்து வாங்க பணமில்லை.. பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை!

போலே பாபா கூட்டத்தில் விஷ பாட்டில்? சாவுக்கு இதான் காரணமாம்!? - வக்கீல் சொல்லும் புதுக்கதை!

சிக்கன் பப்ஸ் மேல் வாக்கிங் சென்ற எலி! அதையும் விற்ற கடைக்காரர்! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments