Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முடிவிற்கு வருகிறது ’கையால் எழுதப்பட்ட’ பாஸ்போர்ட்களின் ஆயுள்

முடிவிற்கு வருகிறது ’கையால் எழுதப்பட்ட’ பாஸ்போர்ட்களின் ஆயுள்
, வெள்ளி, 9 அக்டோபர் 2015 (15:38 IST)
வரும் 2016ஆம் ஆண்டு முதல் எந்திரங்களே சரிபார்க்கும் பாஸ்போர்ட் (கடவு சீட்டு) வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க அகில உலக விமான அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ.) முடிவு செய்துள்ளது.
 

 
20 ஆண்டுகளுக்கு முன்பு ‘பாஸ்போர்ட்’ கேட்டு விண்ணப்பித்த நபர்களுக்கு கையால் எழுதப்பட்ட ‘பாஸ்போர்ட்டு’களே விநியோகிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது எந்திரங்கள் சரிபார்க்கும் வகையில், கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை, சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட்டு அலுவலகங்களில் ஒப்படைத்துவிட்டு புதிய பாஸ்போர்ட்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
 
கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அதனுடைய கால அவகாசத்தை வரும் நவம்பர் 24ஆம் தேதியோடு முடிவடைகிறது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கான பணிகளில் சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகம் போர்க்கால நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அத்துடன் வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் பாஸ்போர்ட்டுகள் புதுப்பிக்கும் காலம் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு மேல் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அதேபோல் புதுப்பிக்கும் காலம் 20 ஆண்டுகள் இருக்கும் பாஸ்போர்ட்டுகளையும் மாற்றி 10 ஆண்டுகள் புதுப்பிக்கும் வகையிலான பாஸ்போர்ட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
 
அதேபோல் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் தாங்கள் வைத்திருக்கும் சாதாரண வகை பாஸ்போர்ட்டுகளை, பாஸ்போர்ட்டு அலுவலகங்களில் வழங்கிவிட்டு 64 பக்கங்கள் கொண்ட ‘ஜம்போ’ பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது.
 
வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்வது மற்றும் அவசரமான வேலைகளுக்கு செல்வதாக இருந்தால் மட்டுமே ‘தட்கல்’ முறையில் ‘பாஸ்போர்ட்’ கேட்டு, பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil