Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி முனையில் 2 பெண்கள் 12 நபர்களால் பாலியல் பலாத்காரம்

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (12:37 IST)
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள கிராமத்தில் தனியார் நிகழ்ச்சியில் நடனமாட வந்த இரு பெண்களை 12 ஆண்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 

 
இதில் தொடர்புடைய ராஜ் மற்றும் ஜிதேந்தரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் எனவும், பாலியல் பலாத்காரம் செய்த 12 ஆண்களில் இவ்விருவரும் அடங்குவர் எனவும் கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் ஆக்ராவை அடுத்து 50 கிலோமீட்டரில் உள்ள ஒரு கிராமத்தில் ஜூன் 25-ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது.
 
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் இதைபற்றி கூறுகையில், “நாங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், நடனம் ஆடி கொண்டு இருக்கும் பொழுது சண்டை ஏற்பட்டது. அதனால், பாதுகாப்பாக எங்களை வீட்டுக்கு கூட்டி போய் விடுவதாக எங்களை காரில் ஏற்றினர்.
 
பாதி வழியில் துப்பாக்கி ஏந்தியபடி ஒரு நபர் எங்கள் வாகனத்தை பின் தொடர்ந்து வருவதை பார்த்த பிறகு தான் நாங்கள் கடத்தபட்டுள்ளதை உணர்ந்தோம்.  கிராமத்திற்கு வெளியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து எங்கள் இருவரையும் 12 நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். எங்களில் ஒரு பெண் கர்பமாக இருப்பாதாக கூறவே அவர்கள் அந்த பெண்ணை விட்டு விட்டனர்” என்று கூறினர். 
 
இதுதொடர்பாக புகாரை பதிவு செய்து மற்ற குற்றவாலிகளை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்