Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலின் முன் செல்பி - பரிதாபமாக உயிரிழந்த 2 சிறுவர்கள்

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (08:57 IST)
பஞ்சாபில் ரயிலின் முன் செல்பி எடுக்க முயன்ற இரு சிறுவர்கள் பரிதாபமாக பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து செல்பிஎடுப்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. மேலும் செல்பி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது.
 
ரயில்வே ஸ்டேஷனில் செல்பி எடுத்தால் 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் நடைமுறை அமுலுக்கு வந்தும் பலர் திருந்திய பாடில்லை.
 
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் - லூதியானா கத்னா சாஹிப் ரெயில்வே பாலத்தில் நின்று கொண்டிருந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 3 சிறுவர்கள், அந்த வழியாக வந்த ரயில் முன் செல்பி எடுக்க முயற்சித்தனர்.
 
அப்போது ஏற்பட்ட விபத்தில் யுவராஜ், கவுரவ் என்ற இரு சிறுவர்கள் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments